இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வன்முறை, கலவரம்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் அதிபர் தேர்தலை ஒட்டி வன்முறை மற்றும் கலவரம் வெடித்ததால அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Update: 2019-05-22 21:36 GMT
இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் அதிபர் தேர்தலை ஒட்டி வன்முறை மற்றும் கலவரம் வெடித்ததால அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த ஏப்ரல் 17-ம் தேதி இந்தோனேசியாவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஜோகோ விடோடோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பினர், தலைநகர் ஜகார்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடுத்ததால் அது கலவரமாக மாறியது. கலவரத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.  போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால், போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

Tags:    

மேலும் செய்திகள்