சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க ஓட்டெடுப்பு : இந்தியாவிற்கு 10 நாடுகள் ஆதரவு - சீனா மீண்டும் எதிர்ப்பு

சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.;

Update: 2019-03-14 02:03 GMT
சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரை சேர்ப்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்தியாவின் கோரிக்கைக்கு 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளித்த போதும், இந்தியாவின் முயற்சிக்கு சீனா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தது. 
Tags:    

மேலும் செய்திகள்