"சுற்றி பார்க்க 'ரிட்டன் டிக்கெட்' உடன் வர வேண்டும்" : ஈஸ்டர் தீவு செல்ல புதிய கட்டுப்பாடுகள்

சிலி நாட்டின் உலக புகழ்பெற்ற சுற்றுலா தளமான ஈஸ்டர் தீவை பாதுகாக்க புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Update: 2019-02-22 11:45 GMT
சிலி நாட்டின் உலக புகழ்பெற்ற சுற்றுலா தளமான ஈஸ்டர் தீவை பாதுகாக்க புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த சட்டங்களின்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே  தீவுக்குள் அனுமதிக்கப்படுவர். 30 நாட்களுக்கு மேல் தீவில் தங்குவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாது. தீவை சுற்றிபார்க்க வருபவர்கள் கட்டாயம் 30 நாட்களுக்குள் திரும்ப செல்லும் பயணச்சீட்டுடன் வரவேண்டும். குடியுரிமை பெற, அங்குள்ள நிறுவனங்களின் சான்றிதழ்கள் அவசியம் என பல கட்டுப்பாடுகள் புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்