Meet அப்டேட் ஆன காக்கா 500 - ரூபாய் நோட்டை "சுட்ட" காக்கா வடை அந்த காலம் - காசு இந்த காலம்

Update: 2024-04-24 08:30 GMT

காக்கா வடையைத் தூக்கிச் சென்றதாக நமது பாட்டி கதை சொல்லிக் கேட்டிருப்போம்... ஆனால் இங்கு ஒரு காக்கை இந்தக் காலத்திற்கேற்றாற் போல் கொஞ்சம் அப்டேட்டாகி, வடைக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டைத் தூக்கிச் சென்றுள்ளது... மாட்டு கொட்டகையில் பலகையில் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டை அலேக்காகத் தூக்கிச் சென்றது காக்கை... அதற்கு பெண் ஒருவர் தர்பூசணியைத் தந்து பார்த்தாலும் மனமிறங்காத நிலையில், அந்தத் திட்டம் தோல்வியடைந்ததால், அடுத்து திராட்சையை நீட்ட உடனே 500 ரூபாய் நோட்டை கீழே போட்டுவிட்டு திராட்சையை வாங்கிக் கொண்டது... இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்