ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் - நயினார் நாகேந்திரனின் உறவினர் வாக்குமூலம்

Update: 2024-04-24 01:59 GMT

தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினரால், நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு, நயினார் நாகேந்திரன் 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதனை தொடர்ந்து அவரின் உறவினரான முருகன் உட்பட நிறுவனத்தில் பணிபுரியும் ஜெய்சங்கர் ஆசைத்தம்பி ஆகியோரையும் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்ப பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை ஆசைத்தம்பி ஜெய்சங்கர் இருவரும் போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். மாலை நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன், தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது, பணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் தனது வாக்குமூலத்தை எழுத்து மூலமாக அளித்து சென்றுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்