குறித்த நேரத்தில் தடுப்பூசி செலுத்தாத 93 லட்சம் பேர் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ள போதிலும், குறித்த நேரத்தில் இதுவரை 93 லட்சத்து 18 ஆயிரம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதது, சுகாதாரத்துறைக்கு வேதனை தரும் செய்தியாக உள்ளது.

Update: 2022-01-12 09:20 GMT

தமிழகத்திற்கு இதுவரை  மத்திய அரசு மற்றும் தனியார் சிஎஸ்ஆர் நிதி உதவியுடன்  9 கோடியே 41  லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் 9 கோடியே 5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மக்கள்தொகை அடிப்படையில், தமிழகத்தில் 5 கோடி 78 லட்சம் பேருக்கு முழு தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய தேவை உள்ள நிலையில்,

தற்போது வரை தமிழகத்தில் முழு தவணை செலுத்தி கொண்டவர்கள் 3 கோடியே 69 லட்சம் அதாவது 63 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

கோவிஷீல்டு செலுத்தி கொண்ட 78 லட்சத்து 33 ஆயிரம் பேர், கோவாக்சின் முதல் தவணை செலுத்தி கொண்ட 14 லட்சத்து 85 ஆயிரம் பேர் என மொத்தம் 93 லட்சத்து 18 ஆயிரம் பேர் குறித்த காலத்திற்குள்  இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர்.

இரண்டாவது தவணை செலுத்தி கொண்ட 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்ற நிலையில்,

தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியானவர்களாக 36 லட்சத்து 21 ஆயிரம் பேர் உள்ளனர்.

இவர்களுள் கடந்த இரண்டு நாட்களில் 41 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்