சென்னை டூ மலேசியா... ஏ.டி.எம். மூலம் பறந்த பல லட்சம் ரூபாய் கறுப்புப் பணம்

லட்சக் கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை ஏ.டி.எம்.மில் செலுத்திய நபரை பிடித்து விசாரித்ததில், மலேசிய முதலாளிக்காக செய்தது தெரியவந்தது.

Update: 2022-01-11 10:42 GMT
லட்சக் கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை ஏ.டி.எம்.மில் செலுத்திய நபரை பிடித்து விசாரித்ததில், மலேசிய முதலாளிக்காக செய்தது தெரியவந்தது.
 

சென்னை செனாய் நகரில் உள்ள ஏ.டி.எம். ஒன்றில் நீண்ட நேரம் ஒருவர் பணம் செலுத்தி உள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார், புல்லா அவென்யூவில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் செலுத்திய நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கறுப்புப் பணத்தை பல ஆண்டுகளாக ஏ.டி.எம்.மில் செலுத்தி வருவது தெரியவந்தது. கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 39 வயது யூசஃப் அலி என்ற அவர், மலேசியாவில் உள்ள ஜி.ஆர். முகமது என்பவருக்காக வேலை செய்வதாக வாக்கு மூலம் அளித்த நிலையில், 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை ஏ.டி.எம்.ல் செலுத்தியதும், எஞ்சிய 5 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் பணத்துடன் அவரைப் பிடித்துள்ளதாகவும் போலீசார் கூறினர். மேற்கொண்ட விசாரணையை வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் நடத்துவார்கள் எனவும் போலீசார் கூறியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்