சக தோழியுடன் குடும்பம் நடத்திய பெண் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு - வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம்

சக தோழியுடன் குடும்பம் நடத்திய பெண் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூறி உள்ளது.

Update: 2021-10-21 07:54 GMT
மதுரை பனங்காடியை சேர்ந்த செல்வராணி என்பவரது மகள் ஜெயஸ்ரீ. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து, ஆண் குழந்தை ஒன்றும் பிறந்து உள்ளது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். தொடர்ந்து, ஜெயஸ்ரீ சென்னையில் இருப்பதும், தனது பள்ளித்தோழி துர்க்கா தேவி என்பவருடன் இணைந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, ஜெயஸ்ரீ தனது குழந்தையை தவிக்கவிட்டுவிட்டுச் சென்றதால் அவர்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி, தாய் செல்வராணி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயஸ்ரீ மேஜர் என்பதால் அவரது விருப்பப்படி செல்ல அனுமதிப்பதாக நீதிபதிகள் கூறினர். கிரிமினல் நடவடிக்கை கோர முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்