பொது இடங்களில் உள்ள சிலைகள் - 3 மாதங்களில் அகற்ற உத்தரவு

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-10-07 10:21 GMT
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் கைனூர் கண்டிகை கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் நிறுவப்பட்ட அம்பேத்கார் சிலையை அகற்ற தாசில்தார் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சிலையை அகற்றியதில் தவறில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், அரசு சாலைகள், அரசு நிலங்கள், மேய்கால் புறம்போக்கு ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

பொதுமக்கள் உரிமைகளை பாதிக்காத வகையில்  சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்க அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், தலைவர் பூங்கா உருவாக்கி அதில் சிலைகளை வைத்து பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், சமுதாயத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்த கூடாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக நிலவும் சாதி மோதல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்