இருசக்கரவாகனத்தின் முன் சீட்டில் குழந்தை... செல்போனில் பேசிய படி சென்ற நபர் - அறிவுரை கூறிய மருத்துவருக்கு அடி-உதை

இருசக்கரவாகனத்தின் முன் சீட்டில் குழந்தையை வைத்துகொண்டு செல்போனில் பேசிய படி சென்ற நபருக்கு அறிவுரை கூறிய மருத்துவர் கடுமையாக தாக்கப்பட்டார். சிசிடிவி காட்சிகளை வைத்து தாக்குதல் நடத்தியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-09-28 23:29 GMT
இருசக்கரவாகனத்தின் முன் சீட்டில் குழந்தையை வைத்துகொண்டு செல்போனில் பேசிய படி சென்ற நபருக்கு அறிவுரை கூறிய மருத்துவர் கடுமையாக தாக்கப்பட்டார். சிசிடிவி காட்சிகளை வைத்து தாக்குதல் நடத்தியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை  உப்பிலிபாளையம், விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்த கணேஷ், கோவை மாவட்டம் செஞ்சேரிமலை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிவருகிறார்.  பணியை முடித்துகொண்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது,  இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், தனது குழந்தையை முன்னால் அமரவைத்து கொண்டு செல்போனில் பேசிய படி வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். குழந்தையின் நலன் கருதி மருத்துவர் கணேஷ் அந்த நபருக்கு அறிவுரை கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த அந்த நபர், மற்றும் அவரது சகாக்கள் மருத்துவர் கணேஷை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில், மருத்துவரை தாக்கிய நபர் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்