ஊர் காவல் படையினருக்கான ஊதியம் அரசு உயர்த்தும் - உயர்நீதிமன்றம் நம்பிக்கை

ஊர் காவல் படையினருக்கான ஊதியத்தை, தமிழக அரசு உயர்த்தும் என சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-21 15:26 GMT
ஊர் காவல் படையினருக்கான ஊதியம் மற்றும் பணி நாட்களை அதிகரிப்பது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது, 10 நாட்கள் என்பது குறைந்தபட்ச பணி நாட்களாக நிர்ணயிக்கபட்டதாகவும்,  தேவைப்பட்டால் கூடுதல் நாட்கள் பணி வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஊர் காவல் படையினர் தேர்வு மற்றும் பணியை முறைப்படுத்தவும், உரிய விதிகளை வகுக்கவும் அரசுக்கு அறிவுறுத்தினர். அத்துடன், குறைந்தபட்சமாக நிர்ணயிக்கபட்ட 5 ஆயிரத்து 600 ரூபாய் ஊதியம் கிடைக்கும் வகையில் பணி வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், ஊர் காவல் படையினருக்கான ஊதியம்,  காவல்துறையினருக்கு இணையாக, உயர்த்தப்படும் என நம்பிக்கை தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்