விநாயகர் சிலைகளை வைத்து வழிபட எதிர்ப்பு - நாராயணசாமி கருத்துக்கு அ.தி.மு.க. கண்டனம்

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுவது கண்டிக்கதக்கது என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-06 15:22 GMT
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட  தடை விதிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுவது கண்டிக்கதக்கது என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த காலத்தில்  நாராயணசாமி முதலமைச்சராக இருந்த போது புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததாகவும், அப்போது புத்தாண்டு மற்றும் சனி பெயர்ச்சி கொண்டாட நாராயணசாமி அனுமதி அளித்ததாகவும் குற்றம்சாட்டினார். இதனிடையே கொரோனா விதிமுறையை பின்பற்றி விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து  மக்கள் வழிபடலாம் என துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்