50 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி - உத்தரவை மீறுகிறதா தனியார் பள்ளிகள்?

50 விழுக்காடு மாணவர்களை மட்டுமே பள்ளிக்கு அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், ஒரு சில தனியார் பள்ளிகள் அதனை மீறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2021-09-04 13:46 GMT
கடந்த ஒன்றாம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும் 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு அழைக்கப்பட வேண்டும் என்றும் நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டமும் தொடர வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் ஒரு சில  தனியார் பள்ளிகள் இதனை மீறி வருவதாக தகவல்  வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்