ஸ்டாலினின் அரசியல் பயணம்... அரசியல்- கலைத்துறையில் தடம்பதித்த ஸ்டாலின்

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியிலும், ஆட்சியிலும் கடந்து வந்த பாதையை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

Update: 2021-05-07 11:16 GMT
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியிலும், ஆட்சியிலும் கடந்து வந்த பாதையை விவரிக்கிறது இந்த தொகுப்பு... 

1953 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தார் ஸ்டாலின். தந்தையின் அரசியல்-கலைத்துறை ஆளுமை காரணமாக, இளம் வயதிலேயே நாடகக்கலை மற்றும் அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார் ஸ்டாலின். 

இவர் நடித்த முதல் நாடகமான 'முரசே முழங்கு' வெற்றிவிழா கண்டது. அதைத் தொடர்ந்து 'திண்டுக்கல் தீர்ப்பு', 'நீதி தேவன் மயங்குகிறான்', 'நாளை நமதே' என திராவிடக் கொள்கைகளை விளக்கும் பல நாடகங்களில் நடித்துள்ளார்.

இதேபோல, திரைத்துறையிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ஸ்டாலின், 'ஒரே இரத்தம்', 'மக்கள் ஆணையிட்டால்' ஆகிய திரைப்படங்களிலும் 'குறிஞ்சி மலர்' என்ற நெடுந்தொடரிலும் நடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்