பொருளாதார ஊக்குவிப்பு திட்டம்-நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கால் ஊதியம் இழந்த தனியார் நிறுவன ஊழியர்களுக்கான பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-04-27 09:07 GMT

ஊரடங்கால் ஊதியம் இழந்த தனியார் நிறுவன ஊழியர்களுக்கான பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த காளிமுத்து மயிலவன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், முழு ஊரடங்கு காலத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், 

தற்போது மீண்டும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு, ஊழியர்களின் ஊதியத்தில் தாக்கம் ஏற்படும் என்றும் கூறி இருந்தார்.

தனியார் நிறுவன ஊழியர்கள் இழந்த ஊதியத்தை ஈடு செய்வதற்கான, பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, 12 வாரங்களில் அதுபற்றி மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்