தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாத அவலம் - தவிக்கும் மாணவர்கள்

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பது மாணவர்களை தவிப்படையச் செய்து உள்ளது.

Update: 2021-04-22 08:24 GMT
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பது மாணவர்களை தவிப்படையச் செய்து உள்ளது. 

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் வார இறுதி நாட்களில், இந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவலால் இந்த வகுப்புகள் தற்போது தடைபட்டு உள்ளது. இதனிடையே வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி, நீட் தேர்வுகள் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை கூறி உள்ளது. ஆனால், நடப்பு ஆண்டில், இதுவரை அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறவில்லை. இதனால், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமா, இல்லையா என்று அரசுப்பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து தெளிவான வழிகாட்டுதலை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்