ராமேஸ்வரம், நாகை, காரைக்கால் மீனவர்கள் கைது.. மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Update: 2021-03-25 13:16 GMT
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் கடற்பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதே போன்று, முல்லை தீவு பகுதியில், நாகை மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நெடுந்தீவு பகுதியில் காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மீனவர்களிடம் இருந்து 5 படகுகள் மற்றும் ஆயிரத்து 30 மீன்களை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கைதான மீனவர்கள் காங்கேசன் துறை, தலை மன்னார், திரிகோணமலை ஆகிய கடற்படை முகாம்களில் தனிமைப் படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 15 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வார்கள் என தெரியவருகிறது. இதனிடையே கைதான மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்