- 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட விபி ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்..புதிய மசோதா, சட்டமானதால் பணி நாட்களின் எண்ணிக்கை 100-ல் இருந்து 125 ஆக உயருகிறது....
- தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின்னர், 39 ஆயிரத்து 821 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்....வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஜனவரி 18ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது....
- வருகிற வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் 215 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் ரயில்களில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.கிலோ மீட்டருக்கு ஒரு பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
- கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏராளமானோர் சொந்த ஊர் செல்லும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து நெல்லைக்கு அதிகபட்சமாக 4 ஆயிரத்து 500 ரூபாயாகவும், கோவைக்கு 5 ஆயிரம் ரூபாயாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது..
- அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 601 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையும் உரத் தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்...காங்கிரஸ் ஆட்சி காலத்தில், விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்....
- டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது..வன்முறைக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட இந்து இளைஞரின் மரணத்திற்கு உரிய நீதி வேண்டும் என்றும் வங்க தேச அரசிடம் இந்தியா வலியுறுத்தி இருக்கிறது
- வங்கதேசத்தில் இந்து இளைஞர் அடித்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்..வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை இந்தியா பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்...
- வங்கதேசத்தில் இந்துக்களின் நிலை கடினமாக உள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்..கொல்கத்தாவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பேசிய அவர், வங்கதேச இந்துக்களுக்கு தேவையானவற்றை இந்திய அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்...
- 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பலனை மத்திய அரசு அழித்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு புரியாத இந்தி பெயரை திட்டத்திற்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
- ஜி ராம் ஜி திட்டத்தால் வேலையில்லா திண்டாட்ட நிலை ஏற்படும் என மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.அதிமுகவிற்கு பாஜக தான் முதலாளி... பாஜக சொல்வதை தான் அதிமுகவினர் செய்வார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.