நினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு - அதிமுகவினரின் கோயில் என கட்சியினர் உருக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு, நினைவில்லமாக திறந்து வைக்கப்பட்டது.

Update: 2021-01-28 08:04 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு, நினைவில்லமாக திறந்து வைக்கப்பட்டது. 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, திரைத்துறையில் இருக்கும் போது அரசியல் பயணம் தொடங்கி போயஸ் இல்லம் பரபரப்பாக இருந்தது. வேதா நிலையம் என்ற பெயரில் இருந்த அவரது வீட்டின் உரிமை குறித்து சர்ச்சைகள் நீதிமன்றம் வரை சென்றன. இதனிடையே, நினைவில்லமாக மாற்றப்படும் என அறிவித்த தமிழக அரசு, தற்போது, அதை திறந்து வைத்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா நினைவு இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். வீட்டினுள் சென்ற அவர், குத்துவிளக்கேற்றி வைத்து ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அவர் மரியாதை செய்தார். 
Tags:    

மேலும் செய்திகள்