உயர்நிலைப் பள்ளிகளாக மாறும் பள்ளிகள் -பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் தகவல்

நடப்பு கல்வி ஆண்டில் 35 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 40 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவதாக, பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.

Update: 2021-01-20 03:05 GMT
நடப்பு கல்வி ஆண்டில் 35 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும்,  40 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவதாக, பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் 40 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு பள்ளிக்கு தலா ஒன்பது முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம், 360 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் , 40 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் என, 400  பணியிடங்கள் ஒப்பளிப்பு  செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். இதற்காக ஆண்டுதோறும் கூடுதல் செலவீனமாக 41.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்