தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும்-வானிலை மையம்

தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-01-11 09:40 GMT
இலங்கை, குமரி கடல் பகுதியை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடத்தில் கன முதல் மிக கனமழையும், குமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. 

தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யகூடும் எனவும் குமரி, மன்னார்வளைகுடா, அரபிக்கடல் ,லட்சத்தீவு பகுதிகளுக்கு அடுத்த இரு தினங்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்