ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் - அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

ஆன்-லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2020-11-23 07:31 GMT
ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளில் சிக்கி இளைஞர்கள் பலரும் தற்கொலை செய்து வந்த நிலையில் இந்த விளையாட்டை தடுக்க தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றியது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் ​புரோகித்தும் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்திருந்தார். 
தடையை மீறி விளையாடினால் 5000 ரூபாய் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும் என்றும், பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே தமிழக அரசின் இந்த அவசர சட்டமானது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்