"கருணாநிதி போற்றிய கலைஞானி கமல்" - கமல்ஹாசனுக்கு ஸ்டாலின் வாழ்த்து

இன்று பிறந்தநாள் கொண்டாடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-07 07:45 GMT
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கருணாநிதியால் கலைஞானி எனப் போற்றப்பட்ட நண்பர் கமல், நலமுடனும் நீண்ட காலம் வாழ வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். 

"கலை உலக நாயகன் கமல்ஹாசன்" - இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து 

கலை உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இயக்குநர் பாரதிராஜா, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், என் முதல் படைப்பின் நாயகன், இலக்கியவாதி, பெரும் சிந்தனையாளன் கமல் என பெருமிதம் தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்