ஊழல் அதிகாரிகள் - நீதிபதிகள் கருத்து

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான், லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2020-11-02 10:56 GMT
விவசாயிகளிடம் இருந்து விரைவாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சூரியப்பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குனர் சுதாதேவி , பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 
அதில், நெல் மூட்டை ஒன்றுக்கு 30 முதல் 40 ரூபாய் வரை ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்பது முற்றிலும் தவறான தகவல் என்றும், 

முறைகேட்டில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இதையடுத்து ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான், லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அனைத்து அதிகாரிகளையும் குறிப்பிட்டு இந்த கருத்தை பதிவு செய்யவில்லை எனவும், 

லஞ்சம் பெற்று ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கே இது பொருந்தும் எனவும், நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். 

தொடர்ந்து, 105 பேர்  மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? வழக்கு பதியப்பட்டதா? எவ்வளவு தொகை பறிமுதல் செய்யப்பட்டது?  என்பது குறித்து
 
விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்