கிறிஸ்துமஸ் கொண்டாட சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம் - சென்னை அருகே பயங்கரம்

Update: 2025-12-25 09:36 GMT

கிறிஸ்துமஸ் கொண்டாட காரில் கணவரோடு சென்றபோது விபத்து - மனைவி பலி

காஞ்சிபுரம் அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட காரில் கணவன்-மனைவி சென்றபோது ஏற்பட்ட விபத்தில், மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் பிரவீன்... இவர் தனது மனைவி பிங்கியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட காரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். காஞ்சிபுரம் அருகே இவரது கார் டேங்கர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. அப்போது, அரசு பேருந்தும் டேங்கர் லாரி மீது மோதியதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காருக்குள் சிக்கிய கணவன்-மனைவியை அப்பகுதி மக்கள் மீட்டனர். எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மனைவி பிங்கி பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த கணவர் பிரவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்