Cuddalore Accident | 9 பேரை காவு வாங்கிய கடலூர் கோரம்.. அதே இடத்தில் அடுத்த அதிர்ச்சி
திட்டகுடியில் 9 பேர் பலியான இடத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி 9 பேர் பலியான நிலையில் மீண்டும் அந்த இடத்தின் அருகே ட்ராக்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது..சரத்குமார் என்பவர் மரம் ஏற்றி வந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த நிலையில், நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். தகவலறிந்து சென்ற போலீசார், ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் சிதறிக்கிடந்த மரக்கட்டைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.