Madurai | Love Marriage | காதல் திருமணத்தில் முன்விரோதம் - பெட்ரோல் குண்டு வீசும்வரை பூதாகரம்..

Update: 2025-12-25 08:31 GMT

காதல் திருமணத்தில் முன்விரோதம் - வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. 35 சவரன் நகைகள், பணம் தீயில் கருகி நாசம். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், காதல் திருமணத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மணமகன் சகோதரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோழவந்தான் சாலையில் வசிக்கும் செல்வம் - பத்மாவதி தம்பதியின் இளைய மகன் அஷ்வந்த், திருமங்கலம் பழனியாபுரத்தைச் சேர்ந்த கவிராஜன் என்பவரது மகள் அனிதாவை காதலித்து திருமணம் செய்தார். இதன் காரணமாக இருவீட்டாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரவில், எட்டு பட்டறை மாரியம்மன் கோவில் அருகே உள்ள அஸ்வந்தின் சகோதரி பிரியதர்ஷினி வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக மர்ம நபர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தீ மளமளவென பரவியதால், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில், வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் தீயில் கருகி சாம்பலானது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்