நண்பர்களுடன் பீர் குடிக்க பைக்கில் வேகமாக சென்ற இளைஞர் பலி
திருப்பதூரில், கிறிஸ்துமஸ் கொண்டாட பீர் பாட்டிலுடன் பைக்கில் சென்ற இளைஞர், நிலைதடுமாறி சாலையில் விழுந்து உயிரிழந்தார்.
அவ்வை நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர், புதுப்பேட்டை பகுதியில் உள்ள மதுபானக்கடையில் கூலிங் பீர் வாங்கிக் கொண்டு நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட பைக்கில் அதிவேகமாக சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், பீர் பாட்டில் கீழே விழுந்ததால் அதனை பிடிக்க முயன்றபோது
நிலை தடுமாறி கீழே விழுந்து கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.