108 ஆம்புலன்ஸ் எத்தனை நிமிடத்தில் வருகிறது:புதிய மென்பொருள் விரைவில் அறிமுகம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு எத்தனை நிமிடத்தில் வருகிறது என்பதை கண்டறிவதற்கான செயலி தமிழகத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-21 03:09 GMT
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் கால் சென்டர் பணியை ஆய்வு செய்து 19 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆம்புலன்ஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கு தமிழக அரசு முழு முயற்சி எடுத்து வருவதாக அவர் கூறினார். விபத்து நடந்த இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் எத்தனை நிமிடத்தில் வருகிறது என்று பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஆன்ட்ராய்ட் செயலி தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஒரு வார காலத்திற்குள் தடுப்பு மருந்து பரிசோதனை செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் ஐ சி எம் ஆர் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்