இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மாரடைப்பில் உயிரிழந்திருப்பது ரசாயன சோதனையில் தெரியவந்தது

இலங்கை தாதா அங்கொடா லொக்கா மாரடைப்பால் உயிரிழந்திருப்பது ரசாயன சோதனையில் தெரியவந்துள்ளது.

Update: 2020-09-17 10:48 GMT
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பிரதீப் சிங் என்ற பெயரில் கோவையில் தலைமறைவாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை நான்காம் தேதி உயிரிழந்த அங்கொட லொக்காவை 
போலி ஆவணங்கள் மூலம் மதுரையில் உடல் தகனம் செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீளமேடு இல்லத்தில் அங்கொட லொக்காவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 
இதனிடையே அங்கொட லொக்கா விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னை ஆய்வகத்தில் நடந்த ரசாயன பரிசோதனை முடிவில் அங்கொட லொக்கா மாரடைப்பில் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. டி.என்.ஏ முடிவுகள் வந்தவுடன் இலங்கையில் இருந்து வந்துள்ள டி.என்.ஏவுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும் என்று சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்