பிரதம மந்திரி கிசான் உதவி திட்டத்தில் முறைகேடு - விவசாயிகள் அல்லாதவர், வங்கி கணக்கில் ரூ.4 கோடி பறிமுதல்

பிரதம மந்திரி கிசான் உதவி திட்டத்தில் முறைகேடு செய்ததாக கூறி, கடலூர் மாவட்டத்தில் 10 தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்து வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-02 06:40 GMT
கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் உதவி திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளை சேர்க்க இணையதளத்தில் மத்திய அரசு சில எளிய மாற்றங்களை செய்தது. அதனை பயன்படுத்தி வேளாண் துறை அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை திருடி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை கடலூர் மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரத்து 752  விவசாயிகள், கிசான் நிதி உதவி திட்டத்தில் சேர்ந்தனர். இதில் பெரும்பாலானவர்,  விவசாயிகள் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வேளாண்துறை அதிகாரிகள் கண்காணிப்பு குழு, வங்கி கணக்குகளை ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில், விவசாயிகளின் வங்கி கணக்கு வைத்துள்ள 226 வங்கி கிளைகளுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் தற்போது வரை 4 கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் பணியாற்றிய 10 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்