பொறியியல் கலந்தாய்வு ரேண்டம் எண் நாளை வெளியீடு

பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்களை, நாளை மாலை 4 மணிக்கு உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் வெளியிடுகிறார்.

Update: 2020-08-25 15:50 GMT
பொறியியல் கலந்தாய்வில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தால் ரேண்டம் எண் முறை பின்பற்றப்படுகிறது. 

அதன்படி, கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதிலும், ஒரே மதிப்பெண் பெற்று  இருந்தால் இயற்பியலிலும், அடுத்தபடியாக வேதியியல் பாட மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 3 பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண் இருந்தால், பிறந்த தேதியின் அடிப்படையில் வயது மூத்த மாணவருக்கு, கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும்.இவை அனைத்தும் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், ரேண்டம் எண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். 

அந்த வகையில் நாளை மாலை 4 மணிக்கு இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகன் வெளியிடுகிறார். சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில், இந்நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்