கீழ்பவானியில் 2,300 கனஅடி நீர் திறக்கப்படும் - நீர்மட்டம் 102 அடியை எட்டும் நிலையில் நடவடிக்கை

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்துக்கு படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Update: 2020-08-15 11:01 GMT
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்துக்கு படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் நிலையில், 105 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கியுள்ளது. நீர் இருப்பு 30 டி.எம்.சி. ஆக உள்ள நிலையில், கீழ்பவானி வாய்க்காலில், நீர் திறப்பு வினாடிக்கு இரண்டாயிரத்து 300 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது.   
Tags:    

மேலும் செய்திகள்