ஆன்லைனில் படிக்க செல்போன் வாங்கி தராததால் விரக்தி - பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

ஆன்-லைனில் படிக்க பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-07-31 09:06 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரின் மகன் விக்னேஷ். 15 வயதான இவர், பத்தாம் வகுப்பு மாணவர். ஊரடங்கு என்பதால் ஆன்-லைன் வாயிலாக வகுப்பு நடைபெற்று வந்த நிலையில் விக்னேஷிடம் செல்போன் இல்லாததால் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் செல்போன் வாங்கித் தருமாறு தன் தந்தையிடம் கேட்டு வந்துள்ளார் விக்னேஷ். ஆனால், முந்திரிக்கொட்டை சேகரித்து வாழ்வாதாரத்தை நடத்தி வரும் விஜயகுமாரால் மகனுக்கு செல்போன் வாங்கித் தர இயலாத சூழல் இருந்தது. இதனால் விரக்தியடைந்த விக்னேஷ், தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் சடலத்தை பார்த்து பெற்றோர், உறவினர்கள் பலரும் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது. 
Tags:    

மேலும் செய்திகள்