மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சிக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கு - இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

Update: 2020-07-27 02:44 GMT
திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், தமிழக அரசும் தாக்கல் செய்த இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது.அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அது 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உருவாக்கப்பட்ட இந்த இடங்களில் ஓ.பி.சிக்கு இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது. இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம்  உள்ளதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது
Tags:    

மேலும் செய்திகள்