சோதனை சாவடியில் ஸ்ரீதரை கைது செய்த போலீசார் : ஸ்ரீதர் தப்பிச் செல்ல அரசியல் பிரமுகர் உடந்தையா?

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தப்பிச் சென்ற நிலையில் அவர் கைதானது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-07-03 07:54 GMT
சாத்தான்குளம் சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தபோது அதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர், தன் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த சம்பவத்தில் சாட்சிகளை அழிக்க உதவியாக இருந்தவர் என்பதால் இவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது சாத்தான்குளத்தில் உள்ள வீட்டில் இருந்து மதுரைக்கு காரில் தப்பிச் செல்ல ஸ்ரீதர் முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கங்கை கொண்டான் சோதனை சாவடியில் அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் அவர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பிறகே காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். இவர் தப்பிச் செல்ல அரசியல் பிரமுகர் ஒருவர் உடந்தையாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்