வெளிநாட்டு நோயாளிக்கு நெருக்கடி அளிக்கும் மருத்துவமனை - ரூ.50 லட்சம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார்

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த வெளிநாட்டை சேர்ந்தவர், 32 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்திய நிலையில், மேலும் 50 லட்ச ரூபாய் கேட்டு தொந்தரவு செய்வதாக மருத்துவமனை மீது புகார் அளித்துள்ளார்.

Update: 2020-06-01 03:23 GMT
சென்னை கீழ்பாக்கம் ஈ.வே.ரா சாலையில் , இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 70 வயதான அகமது அமீர் புக்கர் என்பவர் புற்று நோய்க்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.  மருத்துவ கட்டணங்களாக இதுவரை 32 லட்ச ரூபாய் செலுத்திய நிலையில்,  மேலும் 50 லட்ச ரூபாய் கேட்டு மருத்துவமனையினர் தொந்தரவு செய்வதாக சட்டப்பணிகள் மையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  ஊரடங்கு நீடிப்பதால் தன்னால் பணம் செலுத்த முடியவில்லை என்றும்  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் கூறுகையில்,  8 மாதங்களாக  சிகிச்சை பெற்று வரும் அகமது பஷீர், கடந்த சில மாதங்களாக சுமார் 40 லட்ச ரூபாய் கட்டணத்தை செலுத்தவில்லை என்றும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கி வருவதாகவும்  தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்