நாளை முதல் காலணி, துணி கடைகள் இயங்கலாம் - குளிர்சாதன வசதியின்றி இயக்க மதுரை ஆட்சியர் உத்தரவு
மதுரையில் நாளை முதல் காலணி , துணிக்கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார்.;
மதுரையில் நாளை முதல் காலணி , துணிக்கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ரெடிமேட் துணிக்கடைகள் மற்றும் காலணி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் அனைத்தும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.