இரும்பு பட்டறை தொழிலாளர்கள் பாதிப்பு - நிதியுதவி அளிக்க அரசுக்கு கோரிக்கை
ஊரடங்கு காரணமாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள இரும்பு பட்டறை தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.;
ஊரடங்கு காரணமாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள இரும்பு பட்டறை தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 க்கும் மேற்பட்ட இரும்பு பட்டறைகள் உள்ள நிலையில் பெரும்பாலானவை குடிசை தொழிலாக இயங்கி வருகின்றன. மம்முட்டி, கடப்பாரை. களை மண்வெட்டி , கதிர்அருவா, ஏர் கலப்பை போன்ற விவசாய உபகரணங்கள் இரும்பு பட்டறைகளில்
தயாரிக்கப்படுகின்றன. அவற்றை விற்பனை செய்ய முடியாததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இரும்பு பட்டறை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.