ஆன்லைன் வர்த்தகம் - மத்திய அரசு புதிய உத்தரவு

அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2020-04-19 08:08 GMT
ஆன்லைன் வர்த்தகத்திற்கு நாளை முதல் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் இணையதள வர்த்தகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஊரடங்கு முடியும் வரை அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனைக்கான தடை தொடரும் என்று கூறியுள்ள மத்திய அரசு, அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்