அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டியது அவசியம் - ஸ்டாலின்

கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-01 02:58 GMT
கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பலதரப்பட்ட கருத்துகளுடன், பல்வேறு பரிமாணங்களையும் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்தின் மூலம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே நம் நோக்கம் என்பதால் தொடர்ந்து தங்களுடைய பங்களிப்பையும் ஆதரவையும் வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்