சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது குற்றம் - உயர் நீதிமன்றம்

கொரோனா பரவாமல் தடுக்க, சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாக, காவல்துறை தரப்பில், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2020-03-17 18:27 GMT
சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.  

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது சிறார்நீதி சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும், இதன்படி 7 ஆண்டு சிறை மற்றும் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து வாதிட்ட, மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், கொரோனா  பரவாமல் தடுக்க இதுபோன்ற போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை அரசுக்கு இருப்பதாக தெரிவித்தார். மேலும், போராடுபவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களையும் கொரோனா வைரசில் இருந்து காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளதாகவும், அவர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்