கொரோனா: சிறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறைத்துறை சார்பில் அறிக்கை

சிறையில் கொரோனா பரவுவதை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறைத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2020-03-17 11:37 GMT
சிறையில் கொரோனா பரவுவதை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறைத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் குறிப்பிட்டது படி,சிறைவாசிகள் முறையான பரிசோதனைக்கு பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

சிறைவாசிகளுக்கு இருமல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவும் தனிமை அறையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

சிறைவாசிகள் அவ்வப்போது கைகளை கழுவு அறிவரை வழங்கவும் அதனை காவலர்கள் கண்காணிக்கவும் வேண்டும். சிறைவாசிகளை சந்திக்கவருபவர்களை நெருங்கி பேசுவது, தொடுவதை தவிர்க்க வேண்டும். பணி நேரத்தில் காவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு முகமூடி அணிவது அவசியம்

சிறைவாசிகள் பெரும்பாலான நேரங்களில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் செய்யாமல், காணொலி காட்சி மூலம் ஆஜர் செய்ய வேண்டும்.சிறைவாசிகளுக்கான பொது நேர்காணல், வழக்கறிஞர்கள் நேர்காணல், அனைத்தும் 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும்.
Tags:    

மேலும் செய்திகள்