கொரோனா அச்சத்தில் தமிழக மீனவர்கள் தவிப்பு - வீடியோ மூலம் மத்திய அரசுக்கு வேண்டுகோள்

ஈரான் நாட்டில் கொரோனா அச்சத்துடன் தவிக்கும் தமிழக மீனவர்கள் தங்களை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2020-03-10 07:05 GMT
ஈரான் நாட்டில் கொரோனா அச்சத்துடன் தவிக்கும் தமிழக மீனவர்கள் தங்களை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 800 மீனவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக ஈரானில் உள்ள 6 துறைமுகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உறவினர்களுக்கு ஈரானில் இருந்து வீடியோ மூலம் மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர். அதில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு தங்களை அழைத்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், தூதரக அதிகாரிகள் யாரும் தங்களை சந்திக்கவில்லை எனவும், அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்