"ரசாயனம் தடவிய மீன்களை விற்றால், உரிமம் ரத்து" - உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி அதிரடி

உணவு பொருட்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சோமசுந்தரம் அதிரடியாக கூறியுள்ளார்.

Update: 2020-03-01 04:41 GMT
உணவு பொருட்களில் கலப்படம் செய்தால், உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சோமசுந்தரம் அதிரடியாக கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற சோதனையில், 2 டன் ரசாயனம் கலந்த மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இனிமேல், இது தொடரக்கூடாது என எச்சரித்தனர். இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் பேசிய அதிகாரி சோமசுந்தரம், ரசாயனம் கலக்காத மீன்களை விற்பனை செய்யுமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். மீன் கடைகளில் நடத்தப்பட்டது போல் மீன்களை ஏற்றி வரும் லாரிகளையும் சோதனை செய்ய உள்ளதாக அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்