குரூப்-1 தேர்வில் முறைகேடு : உயர் பதவிகளை வகித்து வரும் 60 பேர் மீது வழக்கு - பணியாளர் தேர்வாணைய முடிவால் அதிகாரிகள் கலக்கம்

குரூப் 1 தேர்வில் முறைகேடு செய்து அரசின் உயர் பதவிகளை வகித்து வரும் 60 க்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.

Update: 2020-02-29 02:14 GMT
2015 ஆம் ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்ததாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பதிலளித்துள்ள பணியாளர் தேர்வாணையம்,  முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்களில்,

மொத்தம் உள்ள 75 காலி பணியிடங்களில், சென்னையில் 2 மையங்களில் இருந்து 60 க்கும் மேற்பட்டோர் தேர்வாகியுள்ளனர். இவர்கள், டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து உயர் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்