கல்லூரி மாணவர்களுக்கான கலை திருவிழா - பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்திய மாணவர்கள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில், கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா நடைபெற்றது.;
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில், கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா நடைபெற்றது. இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தினர். அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் பாராட்டு தெரிவித்தார்.