"விஜய் அரசியலுக்கு வந்தால் ஒரு தமிழனாக வரவேற்கிறேன்" - இயக்குநர் அமீர்

நடிகர் விஜய்க்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் அவருக்கு வளர்ச்சியை தருமே தவிர, பின்னடைவை தராது என இயக்குநர் அமீர் கூறினார்.

Update: 2020-02-09 22:14 GMT
நடிகர் விஜய்க்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் அவருக்கு வளர்ச்சியை தருமே தவிர, பின்னடைவை தராது என இயக்குநர் அமீர் கூறினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற விருது விழாவில் பங்கேற்ற அவர், திரைப்பட கலைஞர்களுக்கு  விருதுகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசி அமீர், தமிழகத்தில் காலூன்றுவதற்கு விஜய் எதிராக இருப்பார் என பாஜக நினைத்திருக்கலாம் என்றும், அதனாலேயே இதுபோன்ற சம்பவம் நடப்பதாகவும் கூறினார். விஜயின் படப்பிடிப்பு தளத்தில் போராட்டம் நடத்தியது கண்டனத்துக்கு உரியது என்றும், விஜய் அரசியலுக்கு வருவதை தமிழனாக வரவேற்கிறேன் என்றும் அமீர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்