15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு - கற்பூரம் ஏற்றி மலைப்பாம்புக்கு ஆரத்தி எடுத்த பெண்கள்
திருப்பூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்து மாராப்பட்டு பகுதி மலை கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுந்து நீந்தி கொண்டிருந்தது.;
திருப்பூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்து மாராப்பட்டு பகுதி மலை கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுந்து நீந்தி கொண்டிருந்தது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். அப்போது கிராம பெண்கள் கற்பூரம் ஏற்றி மலைப்பாம்புக்கு ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர். பாம்பாக இருந்தாலும் கடவுள் என கூறி சிலர் பாம்பை தொட்டு வணக்கியது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.