"தரமற்ற முறையில் கட்டப்பட்ட தடுப்பு சுவர்" - கையாலேயே உடைத்த முதியவர்.. வீடியோ வைரல்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரின் வீடியோ வைரலாகி வருகிறது. பாரூர் கிராமத்தில் தடுப்பு சுவருடன் கூடிய தரைப்பாலம் கட்டப்பட்டது. இது தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள், தடுப்பு சுவரை கையாலேயே உடைத்து காட்டினர்.